தமிழ்நதி.

"பேர், பெரிய."

பேர் + அவை = பேரவை.
பேர் + ஆண்மை = பேராண்மை.
பேர் + ஆசிரியர் = பேராசிரியர்.
பேர் + ஆசை = பேராசை.
இச்சொற்களில் 'பெரிய' என்னும் பொருளை 'பேர்' என்னுஞ்சொல் தருகிறது. இச்சொற்களின் முதலெழுத்து உயிரெழுத்தாக இருப்பதைக்கவனியுங்கள். உயிரெழுத்துகளை முதலெழுத்தாகக்கொண்டுள்ள சொற்களின் உயர்தன்மையை விளக்கும்போது, நாம் 'பேர்' என்னும் முன்னொட்டை சேர்க்கவேண்டும்.

பெரிய + மனிதர் = பெரியமனிதர்.
பெரிய + குடும்பம் = பெரியகுடும்பம்.
பெரிய + புராணம் = பெரியபுராணம்.
இச்சொற்களின் உயர்தன்மையைக்குறிக்க 'பெரிய' என்னும் முன்னொட்டு பயன்படுத்தப்படுகிறது. இச்சொற்களின் முதலெழுத்துகள் ‌உயிர்மெய்யெழுத்துகளாக இருப்பதைக்கவனியுங்கள். எனவே, உயிர்மெய்யெழுத்துகளை முதலெழுத்தாகக்கொண்ட சொற்களின் உயர்தன்மையை விளக்க 'பெரிய' என்றசொல்லை நாம் பயன்படுத்தவேண்டும்.

'பெரிய' என்னும் நிலைமொழி,  மனிதர் முதலான வருமொழிகளோடு இயல்பாகப்புணர்ந்து ஒருசொல்லாகிவிடுகின்றது. இவைகளை நாம் பிரித்தெழுதக்கூடாது. இவைகளை தனித்தனிச்சொற்களாக  நினைத்து, 'பெரிய மனிதர்', 'பெரிய குடும்பம்',  எனப்பிரித்தெழுதுகிறோம். இது தவறு. இவைகளை ஒரு சொல்லாக சேர்த்தேயெழுதவேண்டும்.

தமிழாசியர் திரு இராம்முருகன் அவர்கள் தமிழிலக்கணம் பற்றிய அருமையான, எளிதில் விளங்கும்படியான பதிவுகளை "தமிழ்நதி" என்ற வலைக்காட்சியில் (youtube) வெளியிட்டுவருகிறார். அன்னாரின் ஒருபதிவின் ஒருபகுதியே, எனதுபதிவுக்கு மூலம்.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்