தமிழிலக்கணம்.

மொழிக்கு ஈற்றில் வாராதன.

உயிரெழுத்துகளில், எகரத்தைத்தவிர அனைத்து உயிரெழுத்துகளும் சொல்லுக்கு ஈற்றெழுத்தாய் நிற்கவல்லனவென்று இலக்கணநூல்களில் சொல்லப்பட்டிருந்தாலும், ஒகர ஈற்றுச்சொற்களும், ஔகார ஈற்றுச்சொற்களும் சொல்லுக்கு ஈற்றெழுத்தாய் வருவதில்லை என்றே கொள்ளலாம். அதாவது, 'எ', 'ஒ', 'ஔ' ஆகிய உயிரெழுத்துகள் சொல்லுக்கு ஈற்று (இறுதி) எழுத்துகளாக  வாரா.

வல்லின மெய்யெழுத்துகள் ஆறும், 'க்', 'ச்', 'ட்', 'த்', 'ப்', 'ற்' சொல்லின் ீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீீ  ஈற்றெழுத்தாக வாரா.

மெல்லின மெய்யெழுத்துகள் ஆறும் சொல்லுக்கு ஈற்றில் நிற்குமென இலக்கணநூல்களில் காணப்பட்டாலும், 'ங்', 'ஞ்', 'ந்'  ஆகியவற்றை ஈற்றெழுத்தாய்க்கொண்ட சொற்கள் வழக்கினின்று ஒழிந்தனவாதலால், 'ண்', 'ம்', 'ன்' ஆகிய மூன்று மட்டுமே சொல்லுக்கு இறுதியாய் நிற்குமெனக்கொள்வதில் பிழையில்லை.

இடையின மெய்யெழுத்துகளில் 'வ்'  மொழிக்கு இறுதியாய் நிற்குமென்று இருந்தாலும், அத்தகையசொற்களும் தமிழில் அரிதாகையால், அதை நீக்கி, ஏனைய ஐந்து 'ய்', 'ர்', 'ல்', 'ழ்', 'ள்' மட்டுமே சொல்லுக்கு ஈற்றெழுத்தாய் நிற்குமெனக்கொள்ளலாம்.

 ஆதலால், மொத்தமுள்ள முப்பது முதலெழுத்துகளுள், உயிரெழுத்துகள், 'அ', 'ஆ', 'இ', 'ஈ', 'உ', 'ஊ', 'ஏ', 'ஐ', 'ஓ' ஆகிய ஒன்பதும் ; மெய்யெழுத்துக்கள், 'ண்', 'ம்', 'ன்', 'ய்', 'ர்', 'ல்', 'ழ்', 'ள்' ஆகிய எட்டுமாக பதினேழு மட்டுமே சொல்லின் ஈற்றில் நிற்கவல்லன. இவ்வாறாக அமையும் சொற்களே தமிழ்ச்சொற்கள், ஏனையசொற்கள் தமிழ்ச்சொற்கள் அல்லவென்பது எளிதில் விளங்கிக்கொள்ளக்கூடியதாகும்.

மருத்துவர் 
திரு. வ.பொன்முடி அவர்களின் 
"தமிழ்வெல்லத்தாழி" என்னும் புணர்ச்சியிலக்கண நூலிலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டது. 

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்