தமிழர்மதம்

தமிழர்மதம் -
மறைமலையடிகள்.

அத்தியாயம் - 4
திராவிட ஆரியர்.

உடம்பின் நிறத்தைவிட, உருவவமைப்புகளில் புலப்படக்காணும் வேறுபாடுகொண்டு மக்களின் பல்வேறு பிரிவுகளை தேர்ந்தறிதலே பொருத்தமாகுமென்று தெரிதல்வேண்டும்.

காப்பிரிகளையும் அராபியரையும் மங்கோலியரையும் சீனர்களையும் கண்டவுடனேயே அவர், தம்மில்  வேறுபட்ட அமைப்புடையராதலை தெற்றென அறியாதார் யார்?

அதுபோல், இப்போதுள்ள நம் இந்துமக்களில் இவர் ஆரியர், இவர் தமிழர் என்றுபுலப்பட பிரித்துக்காண்டல் சிறிதேனும் இயலுமோ?  இயலாதே. என்றாலும், சித்தியரும்  திராவிடரும் கலந்தகலப்பில் தோன்றியமக்களையும், மங்கோலியரும் திராவிடரும் கலந்தகலப்பில்  தோன்றியமக்களையும் பிரித்துக்காண்டல், இஞ்ஞான்று எளிதாய் இருத்தல்போலவே, திராவிடரும் ஆரியரும் கலந்தகலப்பில் பிறந்தமக்களையும் பிரித்தறிதல் இயலுவதாகவே யிருக்கின்றது.

இங்ஙனமாக, ஆரிய திராவிட கலவையில் தோன்றியமக்களையே ஆரியராகக்கருதி, அவர்  உறையுமிடம்‌, சரசுவதி யாறு மணல்வெளியில் சுவறி மறைந்துபோன இடமான 'விநசநா' என்னும் ஊரிலிருந்து 'அலகாபாத்து' அல்லது பிரயாகை வரையிலும்  'மத்யதேசமே' ஆகுமென்று மனுமிருதி (2.21) கூறுவதாயிற்று. இங்ஙனம் கூறிய மநு, தனிப்பட்ட ஆரியமாந்தர் உறைந்த காசுமீரத்தையும், அதன்கண் உறைந்த ஆரியரையும் ஒப்புக்கொண்டு கூறாமையினை உற்றுநோக்குங்கள்.

அத்தியாயம் - 4இன் முடிவு.
பதிவு - 5.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்