தமிழர்மதம்
தமிழர்மதம் -
மறைமலையடிகள்.
அத்தியாயம் - 5.
மநு ஒரு திராவிட மன்னன்.
மநு என்பவன் நாகரிக ஒழுக்கத்தில் சிறந்த ஒரு திராவிடமன்னர் என்றும், இம்மாநிலத்தை கடல்நீர் கவரத்துவங்கிய காலத்தில், அம்மன்னன் மலையநாட்டில் ஓடிய கிருதமாலை ஆற்றங்கரையில் தவம்செய்துகொண்டிருக்க, ஒரு மீனவடிவிற்றோன்றிய திருமால் அவனை, அவ்வெள்ளத்திற்கு தப்புவித்தனரென்றும், அவ்வெள்ளம் படித்தபின் அம்மன்னன் பலமுகமாய் சிதர்ந்தோடிப்போன குடிமக்களை யெல்லாம் ஒருங்குசேர்த்து, அவரை மீண்டும் நாடுநகரங்களில் நிலைநிறுத்தி அவர் ஒழுகவேண்டிய வாழ்க்கைமுறைகளை கற்பித்தனனென்றும், அங்ஙனம் அவன் கற்பித்த அறநூலே 'மநுமிருதி' என பெயர்பெறலாயிற்றென்றும் 'பாகவதம்', 'மற்சபுராணம்', 'அக்கினிபுராணம்' முதலான நூல்கள் நுவலாநிற்கின்றன.
இவ்வரலாற்றினை நுனித்தறியுங்கால், காசுமீரத்தில் தங்கிய ஆரியர் நாகரிகவொழுக்கஞ் சிறிதும் இலராகவே, அவரைத்திருத்துதல் ஒருவாற்றானும் இயலாமைக்கண்டு அவரை அறவே விட்டொழித்து, இன்னுங்கிழக்கே கங்கையாறு பாயும் நடுநாடுவரையிற்போந்து, வழிநெடுக நாகரிக வாழ்க்கையில் உயிர் வாழ்ந்த தமிழருடன் கலந்து, தமிழருடைய பழக்கவழக்கங்களில் பழகி, சீர்திருந்தி வந்த 'திராவிடஆரியரு'டைய வாழ்க்கைமுறைகளையே பின்னுஞ்சீர்திருத்தி, அவர்க்கு அறிவு தெருட்டும்பொருட்டே மநுவென்னுந் தமிழ்மன்னன் மத்தியதேசத்தில் அல்லது நடுநாட்டில் உறைந்த 'திராவிஆரியரை' நோக்கியே 'மநுமிருதி' என்னும் அறநூலை வகுப்பானாயினனென்று ஆராய்ந்து உணர்தல் வேண்டும்.
அத்தியாயம் - 5இன் முடிவு.
பதிவு - 6.
Comments
Post a Comment