தமிழர்மதம்

தமிழர்மதம் -
மறைமலையடிகள்.

அத்தியாயம் - 3.
தமிழரின் உருவ அமைப்பு.

தமிழ்மக்கள் எல்லாரும் கரியநிறத்தினராயும், ஆரியரெல்லாரும் ஐரோப்பியரைப்போல் வெளியநிறத்தினராயும் எங்கும் நிறத்தால் வேறுபட்டேயிருந்தாராயின்,  அவரை அதுகொண்டு வேறுபிரித்துக்காண்டல் இயலும். மற்று, கால்டுவெல் ஆசிரியர் காட்டயபடி, தமிழ்மக்களிலேயே கருப்பில் வெளிறியநிறமுடையவரும், சிவந்தநிறம் வாய்ந்தவரும், பொன்னிறம் மிகுந்தவரும், பழுப்புநிறம் பொருந்தியவருமாக பல்வேறு நிறமுடையவர் இடையிடையே காணப்படுகின்றனர்.

பாண்டிய நாட்டிலுள்ள தமிழர்கள் பொதுவாய் கரியநிறத்தினராகவே காணப்படுகின்றனர்; ஆனாலும், உடம்பின் உயரத்தில் தொண்டைநாட்டவரைவிட நீண்டு காணப்படுகின்றனர். நடுப்பட்ட சோழநாட்டிலுள்ளவர்களோ நடுப்பட்ட உயரமுள்ள உடம்பினராய், வெளிறிய கறுப்புநிறமும் பழுப்புநிறமும், சிவந்தநிறமும், பொன்னிறமும் வாய்ந்தவர்களாய் இருக்கின்றனர். தமிழ்மக்களில் பண்டைவகுப்பாராகிய பறையர் பள்ளர் முதலியோர் பகல்முழுதும் வெயிலிலும் வேனலிலும் நின்று பயிர்த்தொழிலை செய்துவருதலால் கரியநிறத்தினராய் இருக்கின்றனரே யல்லாமல், அவரில் உழுதொழிலன்றி  வேறுதொழில்களை நிழலிலிருந்து செய்வார் சிவந்தநிறத்தினராய் உள்ளனர்.

மலையாளநாட்டில் புலையர்களைத்தவிர மற்றைவகுப்பினர்  அனைவரும் கரியநிறத்தினரல்லர். அவர்களில் சிவந்தநிறத்தினரும் பழுப்புநிறத்தினரும் பொன்னிறத்தினரும் மிகுதியாய்க் காணப்படுகின்றனர். இங்ஙனமே தெலுங்கர் கன்னடர் தோடர் முதலான மற்றைத்திராவிடமாந்தர்களும் பல்வேறு நிறத்தினராய் இருக்கின்றனரே யல்லாமல்,  அவரெல்லாரும் முற்றும் கறுப்புநிறமே வாயந்தவரல்லர்.

தமிழ்மக்களின் பண்டைவகுப்பினராகிய பறையர் பள்ளர் முதலியோர்கட்கும்,  மற்றைவகுப்பினரான தமிழர்கட்கும் உடம்பின் அமைப்புவகையில் ஏதோரு வேறுபாடும் காணப்படவில்லை. அங்ஙனமே, தமிழர் மலையாளர் தெலுங்கர் கன்னடர் தோடர் முதலான திராவிடமாந்தரிலும் நிறவேறுபாடு சிறிதுசிறிதே காணப்படினும், உருவவமைப்பில் வேறுபாடு சிறிதுங்காணப்படவில்லை.

அத்தியாயம் - 3இன் முடிவு.
பதிவு எண் - 4.


Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்