தமிழர்மதம்

தமிழர்மதம் -
மறைமலையடிகள்.

அத்தியாயம் - 9
தென்னாடு போந்த திராவிடஆரியர்.

நடுநாட்டில் திராவிடருடன் கலந்துதோன்றிய, திராவிட ஆரியரின் ஒரு சிறுகூட்டத்தாரே மெல்லமெல்ல தென்னாடு போந்தவராவர். எங்ஙனமெனிற்கூறுதும். அத்திராவிடஆரியர் தம்மை பார்ப்பனரென உயர்த்துப்பேசிக்கொண்டு, அவ்வுயர்வுக்கு ஒரு பெருந்துணையாக திராவிடப்பொதுமக்களுக்கு தெரியாத ஆரியமொழியை,  தேவர்களாகிய தமக்குரிய தேவமொழியாகப்பயின்று, உயிர்க்கொலை, கட்குடியோடுகூடிய வெறியாட்டு வேள்விகளை ஆயிரக்கணக்கான வேட்டும் வடக்கேயுள்ள நடுநாடுகளில், அருளொழுக்கத்திற்குமாறான கொடுஞ்செயல்களை பரவச்செய்துவந்தனர்.

அதுகண்டு மனங்கூழைந்த தனித்தமிழ் முனிவர்களான கபிலரும் பதஞ்சலியும் முறையே சாங்கியமும் யோகமும் இயற்றி, அருளும் அன்புமே இறைவன்குணங்கள், அன்பும் அருளும் உடையாரே இறைவன்றிருவருளைப்பெறுவர், உயிர்க்கொலையும் கட்குடியும் மக்களை இம்மைமறுமையிலும் நிரையத்திற்செலுத்தி  பிறவிவட்டத்திலும் வைத்து, ஓயாமல் சுழற்றி வருத்தும் தீவினைகளாமென அறிவுரைக்கூறி, எங்கும் அறிவொளியினை பரவச்செய்வாராயினர்.

கௌதமபுத்தர் என்பார், திராவிடஆரியப்பார்ப்பனர் வேட்டுவந்த உயிர்க்கொலை வேள்விகள், நடைபெறவொட்டாமல்  தடைசெய்து எங்கும் அருளொழுக்க ஒளியினையே விரைந்துபரவச்செய்தனர். அதனால் அப்பார்ப்பனக்குழுவினர், வடநாட்டில் அங்குள்ள மக்களை ஏய்த்துப்பிழைக்கும்வழி அடைபட்டு, மெல்லமெல்ல தென்னாடு நோக்கி வரத்துவங்கினர். 

புத்தர்க்குப்பின் அவ்வருட்பெருங்கொள்கையை, இவ்விந்தியநாட்டிலும், இதற்கு புறம்பேயுள்ள நாடுகளிலும் பரவச்செய்த அருளாளன் அசோகவேந்தனே ஆவன்; இவ்வேந்தனும் சிவபிரானையே வழிபட்டவனென்பது வின்செண்ட் ஸ்மித் (Vincent Smith) என்னும் வரலாற்று நூலாசிரியர் கூறுவதால் பெறப்படுகிறது. இவ்வேந்தன் காலத்தேதான், வடக்கே நடுநாட்டிலிருந்த பார்ப்பனர் தொகுதிதொகுதியாக தென்னாடு புகுந்துகுடியேறினர் என்பது அறியப்படும். இங்ஙனம் குடியேறிய பார்ப்பனரும் திராவிடஆரியக்கலப்பில் பிறந்தவரேயன்றி, இவருந் தனிப்பட்ட ஆரியர் அல்லரென்று துணிந்துகொள்க.

அத்தியாயம் - 9 தொடரும்.
பதிவு - 10.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்