செய்ந்நன்றி

செய்நன்றியறிதலா? அல்லது
செய்ந்நன்றியறிதலா?

செய்நன்றி என்று இடையில் 'ந்' இடாமல் எழுதப்படும் சொல்லானது, ஒருவர் செய்தநன்றி, செய்கிறநன்றி, செய்யப்போகிறநன்றி என முக்காலத்திற்கும் விரிந்து நின்று பொருளுணர்த்தும். இவ்வாறெழுதினால் 'ஒருவர் செய்த நன்மையையறிதல்' என்ற பொருளையும் உணர்த்தாது.

'செய்ந்நன்றியறிதல்' என்ற சொல்லானது ஒருவர் செய்த நன்மையையறிதல் என்ற சரியான பொருளைத்தரும். எனவே, செய்ந்நன்றியறிதல் என்று இடையில் 'ந்' போட்டெழுதவேண்டும். அதுவே சரியானது.

தெய்வப்புலமை திருவள்ளுவர் 'செய்ந்நன்றியறிதல்' என்றே அதிகாரத்தலைப்பிட்டுள்ளார். அவ்வாறே 110ஆம் திருக்குறளிலும் ஆண்டுள்ளார்.
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு".

திரு. தமிழ்ப்பிரியன், M.A., M.Phil. அவர்களது "தவறின்றித்தமிழெழுதுவோம்" என்னும் நூலிலிருந்து நன்றியுடன் எடுத்தாளப்பட்டது.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்