தேர்தல் சீர்திருத்தம்.

தேர்தல் சீர்திருத்தம் - 4.

தேர்தல் சீர்திருத்தம் - பதிவு - 4.
1% விழுக்காட்டிற்கு குறைவாக வாக்குகள் பெற்ற கட்சிகளின் 6.87% வாக்குகளை, பிறகட்சிகளுக்கு பகிர்ந்தளித்தப்பின், அமையும் வாக்குவிழுக்காட்டு அட்டவணை:
அஇஅதிமுக - 44.84%
திமுக              - 34.43%
இதேகா          -   7.10%
பாமக              -   5.88%
பாஜக             -    3.14%
தேமுதிக        -    2.64%
நாதக              -    1.17%
இயூமுலீ         -    0.80%
மொத்தம்       -    100%

இரண்டாவது வாக்கான 'கட்சிவாக்கு'க்கான சமஉ விகிதாச்சாரப்பகிர்வு வருமாறு:
அஇஅதிமுக - 106 (105+1*)
திமுக              -   81
இதேகா          -   17
பாமக              -   14
பாஜக             -     7
தேமுதிக        -     6
நாதக              -     3
இயூமுலீ         -     0
மொத்தம்       - 234
1* என்பதன் விளக்கம்: பின்னமுழுமைப்படுத்தலில் ஒரு சமஉ எஞ்சுகிறது. அது அதிக எண்ணிக்கையில் சமஉ பெற்றக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. 

அடுத்துவரும் அட்டவணையில், இருவாக்குகளில் கட்சிகள் பெற்ற சமஉ கூட்டெண்ணிக்கைத்- தரப்பட்டுள்ளது.
அஇஅதிமுக - 136+106= 242
திமுக              -   89+  81= 170
இதேகா          -     8+  17=   25
பாமக              -     0+  14=   14
பிஜேபி           -     0+    7= ‌     7
தேமுதிக        -     0+    6=     6
நாதக              -     0+    3=     3
இயூமுலீ         -     1+    0=     1
மொத்தம்       - 234+234= 468.

இந்த அட்டவணைப்படி, இருவாக்குரிமை அடிப்படையில் அமையவிருக்கும் சட்டமன்றம், மக்களின் பல்வேறு அரசியல் எண்ணவோட்டங்களை பிரதிபலிப்பதாக இருப்பதை நீங்கள் அறியலாம். 

தேசியக்கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்த கம்யூனிஸ்ட்கள் முதலாக தமிழராட்சி எனப்பேசும் சீமான் ஈறாகவுள்ள அனைவரும், தங்கள் தன்மதிப்பை இழக்காமல் அரசியல்களத்தில் இயங்க, வளர "இருவாக்குரிமை" என்னும் கோட்பாடு உகந்ததாக இருக்கும். தற்போதைய தேர்தல்முறையில் தலைகீழ்மாற்றங்கள் சாத்தியமல்ல என்பதுடன் அவைகள் புதிய சிக்கல்களை உடனழைத்துவரும்.

மேலும், விரிக்காமல் இத்தொடரை இத்துடன் முடிக்கிறேன். மே-2இல் சம‌ தேர்தல்முடிவுகள் வந்தபின் மீண்டும் சந்திப்போம்.
வணக்கம்.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்