தமிழ்தேசியம்.

தமிழ்தேசியம்.

இக்கொள்கை இற்றைநாளின் பெரும் பேசுபொருள். தமிழ்க்குடிகளுக்கும் தமிழ்நேசர்க்கும் உடன்பாடானக்கொள்கை.

இக்கொள்கையாளர்,  தமிழர் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்கின்றனர். மறுக்கக்கூடாத ஞாயம். இதற்கு அரசியல்சட்டப்படி தடையேதும் இல்லை. தமிழர் இடையிடையே தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்துவருகின்றனர். இவர்கள் பிறமொழியினர் என்று சொல்லப்படுபவரும், அரசியல்சட்டப்படியே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; தமிழ்க்குடியினர் வாக்குகளையும் கணிசமாகப்பெறுகின்றனர்.

 தமிழ்க்குடிகளே தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்ற ஞாயமான இலக்கினையடைய, இவர்கள் முன்வைக்கும் வாதங்கள், கைக்கொள்ளும் வழிமுறைகள் இருதரப்பினர்க்கும் சேதாரங்களையே ஏற்படுத்துகின்றன. இதன் பயனை அறுவடைச்செய்பவர் வழக்கம்போல் பார்ப்பனரே.

இந்தியவொன்றியத்தில் தமது போராட்டத்தினால், (ஏனைய மொழிவழி மக்கள் தங்களுடன் இணையாவிட்டாலும்) தங்களால் தமிழ்தேசியத்தை அடையமுடியும் என்று சாதிக்கின்றனர். இந்நிலைப்பாட்டின்வழி தங்களது ஆற்றலை வீணாக்கி மக்களையும் சோர்வடைய வைக்கிறார்கள். 

இந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் திட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளன. அம்மாநிலங்களில் அந்தந்த மொழிபேசுபவர்களே முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆள்கின்றனர். எனவே, அம்மாநிலத்தில் 'மொழிதேசியம்'  என்னும் கருத்து வலுப்பெறவில்லை. கேரளத்தில் மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட ஒருவர்தான் முதலமைச்சராக முடியும். அவரது அரசியல் கொள்கைகள், கடைபிடிக்கும் சமயங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒவ்வொரு மொழிவழி மாநிலங்களிலும் இதே நிலைதான். தமிழ்நாடுமட்டுமே இதற்கு  மாறாக இருக்கிறது. இதற்கான காரணங்கள் இருக்கலாம். அவற்றை ஆராயப்புகுந்தால் தீர்வுகாண இயலாது.   

எனது தாழ்மையானக்கருத்து என்னவென்றால், இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மொழிவழி மாநிலங்களிலும், அம்மாநிலமொழியைத் தாய்மொழியாகக்கொண்டவர்களே, கிராமசபை உறுப்பினர் முதலாக நாடாளுமன்ற உறுப்பினர் வரையான, வாக்குரிமைவழி தேர்ந்தெடுக்கப்படும் பதவிகளுக்கு போட்டியிட முடியும் என்று சட்டமியற்றவேண்டும். பிறமொழியினர்க்கு வாக்குரிமைவுட்பட, தற்போதுள்ள வாழ்வுரிமைகள் அனைத்தும் தொடரும். ஒரு மாநிலத்தில் வாழும், பிறமொழியினர் வாக்குரிமைவழி தேரந்தெடுக்கப்படும் எச்சிறு பதவிக்கும் போட்டியிட முடியாது.

இவ்வேற்பாடு, தற்போது சீர்மரபினர்க்கும் பழங்குடியினர்க்கும் (SC/ST) வழங்கப்பட்டுள்ள தொகுதி ஒதுக்கீடு போன்றதே. இதே அடிப்படையில் மொழிவழி ஒதுக்கீடு (linguistic reservation) செய்துவிடவேண்டும். அவ்வளவே. இது சாத்தியமா என்றால், சாத்தியமே. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது சாத்தியமானநிலையில், மொழிவழி அரசாட்சியும் சாத்தியமே. இன்னும்சொல்லப்போனால், மொழிவழி மாநிலபிரிப்பின் அடுத்தப்படிநிலை வளர்ச்சி மொழிவழி அரசாட்சியே. மொழிவழி நிலமிருக்கிறது. அதன் அடுத்த படிநிலை ஆட்சியுரிமைத்தானே. அது நிகழாததால்தான் முன்னர் 'மராட்டியம் மராட்டியர்க்கே' எனவும், தற்போது 'தமிழ்நாடு தமிழர்க்கே' எனவும் இயக்கங்கள் தோன்றியுள்ளன. இவ்வியக்கத்தின் அடிநாதம் ஆட்சியுரிமையே அன்றி, நிலவுரிமை கேட்பதல்ல.

இவ்வாறான, மொழிவழி அரசாட்சி ஒதுக்கீட்டின்படி (governness based on native linguistic ethnicity) தேசியயினங்கள் ஒவ்வொன்றும் தமக்குரிய ஆட்சியுரிமையைப் பெறுகின்றன. தமிழர்குடிகள் தமிழ்நாட்டில் ஆட்சியுரிமைபெறுவது தானே நிகழ்ந்துவிடும்.

மாறாக, போர்பரணி பாடுவதும், போர்முரசு கொட்டுவதும் தமிழர் அழிவுக்கே கால்கோலும். முற்காலத்தில் நாவலந்தேயம் முழுவதும் பரவிவாழ்ந்த தமிழர், மறைமலையடிகளார் விவரித்தவண்ணம் 'ஆலிழையின் மூக்குப்போன்ற' நிலப்புப்புக்குள் இன்றைக்கு சுருக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தோன்றிய முயற்சியும் கரவாகவும், வெளிப்படையாகவும் அழிக்கப்பட்டது.  இவைகளுக்கான உள்ளுறை காரணங்களை நாம் உய்த்துணரவேண்டும். நான் அவற்றைக்கீழ்க்கண்டவாறு புரிந்துள்ளேன்.

இந்தியாவில் உள்ள பார்ப்பனர் யூதர்களின் குடிவழியினர். இந்தியாவின் யூத எச்சங்கள். இவர்கள் ஆரியர்களல்லர். இவர்களை ஆரியர்கள் என்றழைப்பது, அவர்கள் ஒளிந்துகொள்ளும் வசதியைத்தருகின்றது. ஹிந்து என்னுஞ்சொல்போல, ஆரியர் என்னுஞ்சொல் இவர்களுக்கு பாதுகாப்பு தருகின்றது. இவர்களுக்கு வரலாற்றுவழி வேண்டாதயினம் தமிழினமே. தமிழரை முற்றுமுழுவதுமாக அழித்தொழிக்க பல்லாற்றானும் இடைவெளியில்லாது வினைபுரிகின்றனர். யாழ்ப்பாணத்தில் தமிழர் இனவெழுச்சியை ஓழித்ததில் இசுரேல் என்ற யூதநாட்டின் மறைமுக நேர்முக வினைகள் யாவருமறிந்ததே; அந்த யூதர்களுடன் இந்தியநாட்டு யூத எச்சங்களான பார்ப்பனர் கள்ளக்கூட்டு வைத்தும் வெளிப்படையாக ஒன்றிணைந்தும் வினைபுரிந்ததும் யாவருமறிந்ததே. இற்றைக்கும் பார்ப்பனீய தான்தோன்றி இந்து சங்கத்தாரும், அதன் அரசியல் பிரிவான ஆட்சியிலிருக்கும் கட்சியும் இசுரேலுடனான உறவை வளர்த்தே வருகின்றன.

ஆகவே, தமிழ்கூறும் நல்லுகத்திடம், 'மொழிவழி ஆட்சி வரையறை'யை மாற்றுத்திட்டமாக முன்வைக்கிறேன். இது செயல்படுத்தக்கூடியது. இத்திட்டத்தின்வழி, ஹிந்தி பேசுவோரின் பெரியண்ணன்தனம் (big brother attitude) தானே முடிவுக்கு வரும். எல்லா தேசியயினங்களின் ஆட்சியுரிமை உறுதிபடுவதே சரியான தீர்வு. நம்மைமட்டும் நாம் பார்த்துகொள்ளலாம் என்றால், ஆளும் 'பார்ப்பன பனியா கும்பல்' தமிழர்க்கெதிராக மற்ற தேசியயினங்களை மடைமாற்றும்.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்