Whatsapp

Whatsapp என்னும் எழினி (cell phone) செயலியின் தமிழ்ப்பெயர் 'புலனம்' என்பது. 'புலனம்' என்னும் பெயர் பொருந்துமா? எல்லாம் புலன்களால் அறியப்படுவதே. இதனை, புலனம் என்பதற்கான சிறப்பு என்ன?

வாட்ஸ்அப் செயலி அறிமுகப்படுத்தப்பட்டதே, நேரில் காணவியலாத உறவுகளின் நட்புகளின் நலம் வினவவும் அறியுவும்தான். இன்றளவும் இதற்கான முதலிடத்திலிருப்பது வாட்ஸ்அப் செயலியே.

நாம் நட்புகளையும் உறவுகளையும் காணும்போது முதலில் வரவேற்பு. அடுத்ததாக, வினாக்கள் வழியாகவே நலம் விசாரிக்கிறோம். எப்படி இருக்கிறீர்? என்ன செய்து கொண்டிருக்கிறீர்?  தொழில் எவ்வாறு நடக்கிறது? ஏன் சோர்வாகக்காணப்படுகிறீர்?   உடல்நலத்தில் தொந்தரவு ஏதும் உள்ளதா? இவ்வாறாக நலம் விசாரிப்புகள், வினாக்கள்வழியே நிகழ்கின்றன. ஒத்தவயதுடையவர் நேர்படும்போது, பேச்சு கேள்வியின் வழியே துவங்குவதையும் நாமறிவோம். உலகமாந்தரிடமும் இதுவே பெருவழக்காகவுள்ளது.

ஆங்கிலத்தில் what, who, when, where, which என வினாச்சொல் பலவும் உள்ளன. இவ்வாறாக நலம்விசாரிக்க ஆளப்படும் வினாக்களின் தொகுப்பைக்குறிக்க 'whats' என்னுஞ்சொல்லை அவர் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு பயன்படும் (application) செயலி, whatsapp / Whatsapp  எனப்பெயரிடப்பட்டது.

இதனைக்கருத்தில் இருத்தி, மொழிபெயர்த்தால் 'வினவுசெயலி', 'வினவி', 'வினாவி' என்பதாக அமைவதே பொருந்தும்
 எனக்கருதுகிறேன். அன்பரொருவர் 'என்னாப்பி' எனும்சொல்லை வாட்ஸ்ஆப்பைக்குறிக்க ஆண்டிருந்தார். இவரது சொல்லாட்சி, எமது சிந்தனையை தூண்டியதன் விளைவே இப்பதிவு. நன்றி.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்