புலவர் வெற்றியழகனார்

மூன்றாம் வேற்றுமை".
மூன்றாம் வேற்றுமையின் பொருள், 1.கருவி, 2.கருத்தா, 3.உடனிகழ்ச்சி என்பன.
ஆல், ஆன் என்னும் உருபுகள் கருவி, கருத்தாப் பொருளுக்கானவை. கொண்டு என்னும் சொல்லுருபு கருவிப் பொருளுக்கானது.  
ஒடு, ஓடு என்னும் உருபுகளும், உடன் என்னும் சொல்லுருபும் உடனிகழ்ச்சிப் பொருளுக்கானது.
இவை நாமறிந்ததே.

இதில் ஆல், ஆன் ஆகிய உருபுகளுக்கு பொருள் ஒன்றே யெனினும், ஏன் இரண்டு உருபுகள் தோன்றின என்பதற்கு புலவர் வெற்றியழகனார் ஒரு காரணத்தைச் சொல்கிறார். அதனை அறியலாமே.

உயிரெழுத்துகள் தொடருமானால் 'ஒர்' எனவும்; உயிர்மெய் எழுத்துகள் தொடருமானால் 'ஒரு' எனவும் பயன்படுத்துவதைப் போல், உயிரெழுத்துகள் தொடருமானால் 'ஆன்' எனவும்; உயிர்மெய் எழுத்துகள் தொடருமானால்  'ஆல்' எனவும் வருதல் வேண்டும்.

# உயிரெழுத்து தொடரும்போது 'ஆன்' உருபு வருவதற்கான எடுத்துக்காட்டு.
* "அண்டமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற்ற அமைய நெறிப்பட நாடி" - தொல். எழுத்து சூத். 83.

# உயிர்மெய்யெழுத்து தொடரும்போது 'ஆல்' உருபு வருவதற்கான எடுத்துக்காட்டு.
* "வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையால்
தம்மினாகிய தொழிற்சொல் முன்வரின்" - தொல். எழுத்து சூத். 156.

*  ஆன், ஆல் உருபுகள் ஒரே திருக்குறளில் அமையும் எடுத்துக்காட்டு. குறள் எண் - 298.
"புறத்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்".

புலவர் திரு. வெற்றியழகனாரின் "தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - எளியவுரை" என்னும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்