ஙகரக்குடும்பம்.

"ஙகரக்குடும்பம்".
மெய்யெழுத்து வரிசையில் இரண்டாவது எழுத்து. , 'ங' என்னும் சொல்லில் 'ஙனம்' என்ற ஒரே சொல்தான் உள்ளது. இதன்பொருள், 'இடம்', 'தன்மை' என்பன. எனவே, நடைமுறையில் ஒருசொல்லுக்கு முதலில் வராத எழுத்தென ஙகரத்தைக் கொள்ளலாம். ஙகரம் ஒரு சொல்லின் ஈற்றெழுத்தாய் வரவே வராது. 

கரகத்திற்கு இனமான மெல்லின எழுத்து என்பதால் புணர்ச்சியில் ககரமெய்க்கு பதிலாக இடம்பெறும். எடுத்துக்காட்டு, வேய்ங்குழல். 'எ', 'யா' என்ற வினா எழுத்துக்களுடன் சேர்த்து எங்ஙனம்?, யாங்ஙனம்? என வினாக்களாக வரும். அகர, இகர, உகர (அ, இ, உ) சுட்டெழுத்துகளுடன் சேர்ந்து அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம் என வரும். இதில் 'உங்ஙனம்' என்பது தற்போது வழக்கில் இல்லை. மெய்யெழுத்தோடு சேர்ந்து, 13  எழுத்துகளை உடைய ஙகரக்குடும்பத்தில் ஙகரமும் (ங்), ஙகர அகரமும் (ங) ஆகிய ஈரெழுத்தே சொல்லின் இடையில் வரும். இந்த  ஈரெழுத்தே, பயன்படுத்தவே முடியாத ஏனைய பதினோரெழுத்தை, தமிழ் நெடுங்கணக்கில் இடம்பெறச் செய்து வருகின்றன. அதனால்தான் "ஙப்போல் வளை" என்னும் பழமொழியும் தோன்றியது.

ஙகரக்குடும்ப எழுத்துகளை வாழவைப்பது நற்றமிழரின் கடமையல்லவா? ஒருகை விரல்களின் எண்ணிக்கையில் உள்ளடங்கும், ஙகரச்சொல்களை வாய்ப்புள்ள இடங்களில், உரைநடையில் நாம் பயன்படுத்தத் தயங்கக்கூடாது. அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம் என்பன இலக்கிய வழக்குகள் எனக்கருதி தவிர்க்கவேண்டாம். அதேபோல் ககரவொற்று மிகுமிடங்களில், பொருந்துமென்றால் ஙகரமெய் இடவேண்டும். நன்றி.

Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர்ப்புலவர்

அண்ணாமலையூர்புலவர்