தமிழ்ப்பாடநூலில் புணர்ச்சியிலக்கணம். (2-ஆம் பதிவு).

புணர்ச்சியிலக்கணம். 

+2 வகுப்புக்கான தமிழ்ப்பாடநூலில் காணப்படும் பிழை.  

பாடநூலின் 206ஆம் பக்கத்தில் பின்வரும் தொடர் உள்ளது.  "கலவரம் மேலிடக் குழந்தையை நெஞ்சோடு சேர்த்து அழுத்தியதில் சற்றே அடங்கியிருந்த அது மீண்டும் ஈனஸ்வரத்தில் முனகத் தொடங்கியது." 

‘கலவரம் மேலிடக் குழந்தையை’ என்னும் சொற்றொடரில் இரண்டாஞ்சொல்லின் ஈற்றில் ககரமெய் மிகுந்ததால் அது வருமொழியுடன் புணர்ந்ததை அறியலாம். 

‘மேலிட’ என்பது கலவரம் என்னும் சொல்லுடன் உறவுள்ளது. ‘கலவரம் அதிகரிக்க’ என்பது சொல்லவரும் கருத்து. ‘மேலிடம்’ என்னும் மகரயீற்றுச்சொல்லை ‘குழந்தை’ ‌என்னும் பெயருடன் புணர்த்த மகரமெய் நீங்கி வருமொழியின் ககரமெய் மிகுந்தது. ‘மேலிடக்குழந்தை’ என்பது பொருளை வேறுதிசைக்குக்கொண்டு செல்கின்றதன்றோ. எனவே இது பொருளற்ற வன்புணர்ச்சியென்பதை ஏன் மறந்தனர். 

‘ஈனஸ்வரத்தில்’ என்னுஞ்சொல்லில் வடவெழுத்து ஏன் இடம்பெற்றது. தமிழ்ப்பாடநூலில் வடவெழுத்து இடம்பெறலாகாதென்னும் உணர்ச்சி ஏன் இல்லை. 

‘முனகத்தொடங்கியது’  என்பது ஒருபொருள்குறித்த சொற்றொடர். இதனை இருசொல்லாக பிரிக்க வேண்டா. இடைவெளியின்றி ஒருசொல்லாகவே வரும். நீங்கள் இச்சொற்றொடரை ஒலித்துப்பாருங்கள். இடைவெளியுடன் ஒலிக்க இயலாது.

நன்றி. வணக்கம் 
 


    
 



Comments

Popular posts from this blog

இராச மனோகரன்

அண்ணாமலையூர் புலவர்.

அண்ணாமலையூர்ப்புலவர்