Posts

அண்ணாமலையூர்ப்புலவர்

"தலையாய நட்பு". பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் தமிழுக்குப்பெருமை சேர்ப்பன. எட்டுத்தொகை நூல்களுளொன்று புறநானூறு. புறப்பொருள் ஒழுகலாறுகளான பொருள், வீரம், ஒழுக்கம் என்பனவற்றை வெளிப்படுத்தி, மக்களை நெறிப்படுத்தும் பாடல்கள் நானூறு தொகுக்கப்பெற்றதால் 'புறநானூறு' என்னும் பெயர்பெற்றது. இதன்கண் நற்கருத்தமைந்த அணிகலணான பாடலொன்றைச்சுவைப்போம்; கடைபிடிப்போம். பாடலின் பின்னணி வருமாறு: உறையூரை தலைநகரமாகக்கொண்டு கோப்பெருஞ்சோழன் ஆண்டு வந்தான். பாண்டியநாட்டில் 'பிசிராந்தையார்' என்னும் நற்றமிழ்ப்புலவர் வாழ்ந்து வந்தார். இருவரும்  நேரில்காணாமலே நட்புறவு பூண்டிருந்தனர். யாது காரணத்தாலோ, இருவரும் ஒருவரையொருவர் நேர்காண இயலவில்லை. ஆயினும்,  உள்ளத்தால் ஒன்றி நட்பினை வளர்த்து வந்தனர்.  கோப்பெருஞ்சோழனின் இருபுதல்வர்க்கிடையே ஆட்சியுரிமைக்கான பூசல்கள் நேரிட்டன. மன்னன் மனம்வெறுத்து உயிர்நீங்க எண்ணி, வடக்கிருந்தான். தன்னாருயிர் நண்பர் பிசிராந்தையார் தன்னைக்காண வருவார் என்று உறுதிகொண்ட மன்னன், அவர்க்கு தம்மருகில் ஓரிருக்கை அமைத்தான். உள்ளுணர்வு தூண்டப்பெற்ற  பிசிராந்தையார், தன்நண்பனாம் மன்ன...

அண்ணாமலையூர் புலவர்.

அண்ணாமலையூர் புலவர் இராசமனோகரன். "செந்தமிழ்ச்சுவை -  முத்தொள்ளாயிரம்". அறிவார்ந்த ஐயன்மீர். அனைவருக்கும் வணக்கம். "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்துபாயுது காதினிலே" என மகாகவி பாரதியார் நமக்குப்பாடிக்காட்டினார். அவர் பாடிக்காட்டியதை நாம் நாடிப்பார்ப்போமா. நாடி பார்ப்பதற்கு, மிகப்பழைய இலக்கியமாய் அமைந்த 'முத்தொள்ளாயிரம்' என்னும் நூலிலிருந்து, முத்தான ஒரு பாடலை எடுத்துக்கொள்வோம். மூன்று தொள்ளாயிரம் முத்தொள்ளாயிரம் எனப்பட்டது. சேரமரபு மன்னர்க்கு ஒரு தொள்ளாயிரம், சோழமரபு மன்னர்க்கு ஒரு தொள்ளாயிரம், பாண்டியமரபு மன்னர்க்கு ஒரு தொள்ளாயிரம் என, ஈராயிரத்துஎழுநூறு அழகிய வெண்பாக்களைக்கொண்ட இந்நூல், நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இந்நூலாசிரியர் யாரெனத்தெரியவில்லை. கிடைத்த நூற்றுமுப்பது பாடல்களும் நல்லிசைப்புலவோரால் மேற்கோள்களாக காட்டப்பட்டவைகளில் இருந்து தொகுக்கப்பெற்றவை. சோழமன்னன் கிள்ளிக்குப்பிறந்தநாள்  கொண்டாடப்பட்டது. அதன்பொருட்டு நகரம் தூய்மைப்படுத்தப்பட்டது. அதனை நகைச்சுவை ததும்ப புலவர் உரைக்கிறார். பாடல் வருமாறு: "அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர்...

அண்ணாமலையூர்புலவர்

"கலித்தொகைப்பாடல்". அண்ணாமலையூர் புலவர் திரு. இராச மனோகரன். சங்கக்காலத்தில் எழுதப்பட்ட, பதினெண்மேற்கணக்கு நூல்களில் ஒன்றாகிய, "கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகையில்" ஒரு சோற்றுப்பதமாக ஓர் இன்சுவைப்பாடலைச் சுவைப்போமா! அந்துவனார் என்னும் புலவர் இயற்றிய, நெய்தல்திணையில் தோழியின்கூற்றாக அமைந்த இப்பாடலில் அறக்கருத்துகள் செறிந்துள்ளன. மக்கள்வாழ்க்கைக்கு வேண்டிய நல்லறங்களை எடுத்தோதுவதால் இவர் "நல்லந்துவனார்" என்னும் அடைமொழியால் சிறப்பிக்கப்பட்டார். பத்தொன்பது அடிகளைக்கொண்ட இப்பாடலின், முதலைந்து அடிகள் தலைவனின் சிறப்பை உரைக்கின்றன. அடுத்த ஒன்பதடிகள் அறக்கூற்றின் வாயிலாக தலைவியுற்ற துயரை உரைக்கின்றன. இறுதி ஐந்தடிகள், தலைவியின் துயர்தீர்க்க தலைவனை விரைந்து செல்கவென வேண்டுகின்றன.  நாம் அறப்பகுதியையும் வேண்டல்பகுதியையும் காண்போம். "மாமலர் முண்டகம் ...... ................................................................. ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல் அன்பு எனப்படுவது தன்கிளை செ...

இராம்முருகன்

'தமிழ்நதி'  திரு. இராம்முருகன், தமிழாசிரியர்.   ‌‌ "தமிழில் புணர்ச்சி". தமிழுக்கே உரியது புணர்ச்சி. புணர்ச்சியின் சிறப்பை, இன்றியமையாமையை ஒரு குறள்வழி அறிவோமா. வான்சிறப்பு, குறள் எண் - 17. சொல்பகுக்காத, புணர்ச்சியுடன் அமைந்தது. "நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி தானல்கா தாகி விடின்".  சொல்பகுக்கப்பட்டபின், "நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி தான்நல்காது ஆகி விடின்". இக்குறளில், தடிந்து, எழிலி ஆகிய இருசொல்தான் இலக்கியவழக்கு உடையன. ஏனையவை நம் பேச்சுவழக்கில் உள்ளவை. தடிந்து = மறுத்து, விலக்கி, குறைத்து. எழிலி = மேகம். இக்குறளில் என்னென்ன புணர்ச்சிவிதிகள் பயன்படுத்தப்பட்டால், இது செய்யுள்வடிவம் பெற்று சிறந்தது என்பதனை விளக்கமாக காண்போம். செய்யுளில் சொல்களை, 'சீர்கள்' என்பர். இரண்டிற்கும் வேறுபாடு என்ன. சொல் தன்னளவில் முழுமைபெற்று பொருள்தரும். சீர் தனக்கு முன்னும் பின்னும் உள்ள சீர்களுடன் பொருந்தி பொருள்தரும். இச்செய்யுளில் சீர்களின் புணர்ச்சியில் செயல்பட்ட, புணர்ச்சிவிதிகளை முதலில் காண்போம். 1. நெடுங்கடலும் + தன்னீர்மை = நெட...

அண்ணாமலையூர் புலவர்.

"கவிமடல்".  ஒரு கடிதம், அது திருமுகம் எனப்படும். பா வடிவிலமைந்து பாசுரம் எனவும் பெயர்பெற்று "திருமுகப்பாசுரம்" என்னும் சிறப்புபெற்றது. 'கடிதம்' என்பது இக்காலவழக்கு. மடல், அடங்கல், முடங்கல் என்பன, இடைக்காலவழக்கு.  ஆழ்வார்கள், 'சிறியதிருமடல்', 'பெரியதிருமடல்' என நாராயணனுக்கு வரைந்துள்ளனர். திருமுகம் என்பது பழையவழக்கு. பன்னிரு திருமுறைகளில், பதினோராம் திருமுறையில் முதற்பாட்டாக அமைந்த இத்திருமுகத்தை அருளியவர், மதுரையம்பதிவாழ் சொக்கநாதப்பெருமானே ஆவர். சோமசுந்தரன், ஆலவாயப்பன் எனப்பரவப்படும் சிவபெருமான், தன்னடியவர் இசைவல்லான் பாணபத்திரனுக்கு உதவுமாறு, மன்னன் சேரமான்பெருமானுக்கு  விடுத்த பரிந்துரைக்கடிதம். இத்திருமுகப்பாசுரம், ஒரு கடிதத்திற்குரிய இலக்கணங்கள் நிறைவாக பெற்று, பன்னீர் அடிகளலிலமைந்த 'நேரிசை ஆசிரியப்பா' ஆகும். புரவலனே, புலவராக இருந்து வரைந்த இம்மடலைக்கற்று, நமது மடலெழுதும் திறனை மேம்படுத்திக்கொள்வோமாக! முதலில் திருமுகப்பாசுரத்தைக் காண்போம். "மதிமலி புரிசை மாடக் கூடற் பதிமிசை நிலவு பால்நிற  வரிச்சிற கன்னம் பயில்பொழில் ஆல வாயில...

தமிழ்மொழிமரபுநடை.

"தொடர்மொழியென்பது ஒன்றுக்கு மேற்பட்டசொற்கள் ஒரேசொல்லைப்போல் பிரியாமலிருப்பதாகத்தான் கொள்ளவேண்டும். தொடர்மொழி என்பதும் தொடர் என்பதும் வேறுவேறென்பதை புரிந்துகொள்ளவேண்டும். "முருகனுக்குநண்பன்" - இது 'கு' என்னும் நான்காம்வேற்றுமையுருபு வெளிப்பட்டுவரும், நான்காம்வேற்றுமைவிரிநிலைத்-தொடர் எனப்படும். "முருகனுடையவீடு" - இது 'உடைய' என்னும் ஆறாம்வேற்றுமையுருபு வெளிப்பட்டுவரும், ஆறாம்வேற்றுமைவிரிநிலைத்-தொடர் எனப்படும். 'முருகனுக்கு நண்பன்', 'முருகனுடைய வீடு' என, இந்த  வேற்றுமைவிரிநிலைத்தொடர்-மொழிகளை பிரித்து, உருபேற்றதான பெயர்களை உருபுடன் தனியாகவும், பெயரையோ வினையையோ தனியாகவுமெழுதுவோமானால், அப்போது அவை தொடர்மொழிகள் ஆகமாட்டாவென்பது எண்ணிப்பார்க்கத்தக்கது. வேற்றுமைப்புணர்ச்சியில், 2, 3, 4, 5, 6, 7 ஆகிய வேற்றுமைத்தொகைநிலைத்- தொடர்மொழிகள் (வேற்றுமைத்தொகைகள்) ஆறும்; 2, 3, 4, 5, 7 ஆகிய வேற்றுமையுருபும் பயனும் உடன்றொக்கதொகைகள் ஐந்தும், ஆக மொத்தம் பதினொரு வேற்றுமைத்தொகைகள் பிரிக்கவே முடியாதவை; பிரிக்கவுங்கூடாது".  2, 3, 4, 5, 6, 7 ஆகிய ஆறு வேற்...

அண்ணாமலையூர் புலவர்.

அண்ணாமலையூர் புலவர்  திரு. இராச மனோகரன். "மழலைச்செல்வம்". "படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைப்பெரும் செல்வர் ஆயினும் இடைப்பட  குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைதாம் வாழும் நாளே". புறநானூற்றுப்பாடல் - 188. இயற்றியவர் : பாண்டிநாட்டரசன் அறிவுடைநம்பி. உடை = உடைமை. இடைப்பட = மெதுவாக. துழந்து = (கைகளால்) துழாவி. அடிசில் = உணவு. விதிர்த்து = சிதறி. மயக்குறு = (இன்பத்தில்) மயங்கி (மகிழச்செய்யும்). பயக்குறை = பயன்குறைந்த. சங்கவிலக்கியத்தில், எட்டுத்தொகை நூல்களில் ஒன்று புறநானூறு. அதிலமைந்த இப்பாடலில், மழலைச்செல்வத்தின் மகிழ்ச்சியைப் படம்பிடித்துக்காட்டியுள்ள, அருந்தமிழ்ப்புலமை பெற்ற இப்புலவர் பாண்டியநாட்டு அரசனானவர். அம்மழலைச்செல்வம் எத்தகு மகிழ்ச்சியை வழங்குகிறது என அறிவோமா! குறுகுறுவென மெதுவாக நடந்து, சிறு கைகளால் நெய்மணக்கும் உணவைத் தொட்டு, துழாவி எடுத்து வாயில் இட்டுக்கொள்கிறது. வாயில் இட்டவுணவு சிதறி, மார்பு, வயிறு உள்ளிட்ட உடல்பகுதிகளில் பட்டு தரைய...